இன்று பெருமளவு மக்கள் ஒன்றிணையும் அறிகுறி! குவிக்கப்படும் பொலிஸார்

Report Print Vethu Vethu in சமூகம்

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட வைத்தியர் மொஹமட் ஷாபி இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குருணாகல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில் குருணாகல் நீதிமன்றத்திற்கு தீவிர பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது நீதிமன்றத்தின் முன்னிலையில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக அமைதியை பேணும் நோக்கில் பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.