வன்னி அபிவிருத்திக்கு அமைச்சர் மனோகணேசனின் பங்களிப்பு

Report Print Theesan in சமூகம்

வன்னி பிரதேசத்தின் அபிவிருத்தி போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர் மனோகணேசன் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் வன்னிப் பிராந்தியத்திற்கான இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அமைச்சர் மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டில் வன்னி பிராந்தியத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது. இந்த வேலைத்திட்டங்கள் அவருடைய அமைச்சின் இணைப்பாளர்களின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிதியின் ஊடாக பாடசாலைகள் வீதி அபிவிருத்தி, கிராமிய அபிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்திற்கு 100 மில்லியன் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் முதற்கட்டமாக நாளை 11 மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களிற்கான நிதி ஒதுக்கீடு வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டுள்ளதுடன் இந்த நிதி கிடைக்கப்பெற வேண்டியவர்களிற்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் மனோகணேசன் வன்னி பிராந்தியத்திற்கான அபிவிருத்தி போதாமல் இருப்பதை கருத்தில் கொண்டே இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தேவை ஏற்படின் மேலதிகமான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கும் அமைச்சர் கருசனை கொண்டுள்ளார்.

இதேவேளை வாழ்வாதார உதவிகள் மேலும் ஒரு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைத்திட்டங்களானது வன்னி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்க முடியும் என்ற அமைச்சரின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றதாகவும் வவுனியா மாட்டத்தில் வேலைத்திட்டங்களை அமைச்சரின் வவுனியா இணைப்பாளர் எம். பி. நடராஜ் ஊடாக நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்துயள்ளார்.

மேலும், நேரடியாகவும் மக்கள் எம்முடன் தொடர்பு கொண்டு இன்னும் அதிகமான வேலைத்திட்டங்களையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அபிவிருத்தியுடன் நாங்கள் நின்றுவிடாது மிக விரைவில் அமைச்சரின் இணைப்புக் காரியாலயம் ஒன்றினை வவுனியாவில் திறந்து வைத்து அதனூடாகவும் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்துவைப்பதற்கான சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers