விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய குழுவின் தகவலால் களத்திலிறங்கிய இராணுவம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் அகழ்வு நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி 15 பேர் அடங்கிய குழு ஒன்றால் விசேட ஸ்கானர்கள் மூலம் தேடுதல் நடத்தப்பட்டு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அனைவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குழுவினரின் தகவலுக்கு அமைவாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.