யாழைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளுக்காக ஸ்மார்ட் ஸ்ரீலங்கா

Report Print Sumi in சமூகம்

யாழ்.பழைய பூங்காவில் ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

இன்று காலை 8.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதியில் 2 மாத காலக்கட்டத்தில் இந்த அலுவலகம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் ஸ்ரீலங்கா என்பது ஜனாதிபதியின் சிந்தனையின் கீழ் உருவான ஒர் திட்டமாகும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும்தொழில் மற்றும் இருக்கப்போகின்றதொழில் பற்றி இளைஞர், யுவதிகளுக்கு எடுத்துச் சொல்லும் இடமாக இந்த ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகம் அமைக்கப்படவுள்ளது.

இலங்கை உட்பட ஏனைய நாடுகளில் தமது கல்வித் தகைமைகளுக்கும், தமது சான்றிதழ்களுக்கும் ஏற்ற தொழில் எங்கு உள்ளதோ அதை அவர்கள் கண்டுபிடித்து, அதற்கான வாய்ப்புக்களை பெற இந்த அலுவலகம் உதவியாக அமையும்.

அத்துடன், இளைஞர், யுவதிகள் சுய தொழில் செய்யப் போகின்றார்கள் எனின், அதற்கான உதவிகளையும் இந்த அலுவலகம் முன்னெடுக்க உள்ளது.

இந்த அலுவலகம் கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers