வவுனியாவில் புகையிரத கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Theesan in சமூகம்

வடக்கு மற்றும் கிழக்கை சேர்ந்த புகையிரத கடவைக்காப்பாளர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்து தமது கடமையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என தெரிவித்தே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத கடவை காப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் 250 ரூபாய் சம்பளத்தினை உயர்த்து, பொலிஸாரிடம் இருந்து எம்மை மீட்க வேண்டும், எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன?, எம்மை நிரந்தர நியமனத்தில் உள்வாங்கு என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இவ் ஆர்ப்பாட்டம் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

p>

Latest Offers