மாணிக்கக்கல் வர்த்தகராக தன்னை காட்டிக் கொண்ட பாகிஸ்தான் பிரஜை கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இரண்டரை கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் அவரை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

மாணிக்கக்கல் வர்த்தகராக தன்னை காட்டிக்கொண்டு சந்தேகநபர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் 2.85 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், மாணிக்கக்கற்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Latest Offers