கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் 2 கோடி ரூபா செலவில் எம்.ஈ.எச்.மகறுப் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கு பிரதமரின் கிண்ணியா விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட உள்ளதோடு, புதிய மூன்று மாடி வகுப்பறை கட்டடத்துக்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த விஜயத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், எம்.எஸ்.தௌபீக், க.துரைரட்ணசிங்கம், இம்ரான் மகரூப் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers