அபிவிருத்தி திட்டங்களுக்கு தடையாக உள்ள தோட்ட அதிகாரிகள்: இனிவரும் காலங்களில் தொடர்ந்தால்...

Report Print Thiru in சமூகம்

இனிவரும் காலங்களில் தோட்ட அதிகாரிகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் இரத்தாகி செல்லுமானால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் தோட்ட அதிகாரிகளே என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

அரசாங்கத்தினால் பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் தடையாக இருக்கக் கூடாது

தற்போது அரசங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கம்பெரலிய வேலைத்திட்டம், கம்மாவத்த வேலைத்திட்டம் உட்பட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் வரும் போது அதற்கு தோட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எக்காரணம் கொண்டும் யாரும் தடையாக இருக்கக் கூடாது.

தற்போது மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்கள் பலதரபட்ட தரப்பினாரால் பல்வேறுப்பட்ட துறைகளில் முன்னெடுக்கபட்டு வருகின்றன.

இந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான காணிகளையும், தேவையான ஏற்பாடுகளையும் தோட்ட நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.

சில தோட்டங்களில் இதற்கான ஒத்துழைப்புக்கள் முறையாக கிடைக்க பெறாததினால் பல கோடி பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் இரத்தாகி செல்கின்றது. இதனால் பாதிக்கப்படுவது பெருந்தோட்ட மக்களே.

இதனை இவ்வாறு விட முடியாது. இந்த நாட்டில் வருமானம் குறைந்த அபிவிருத்திகளில் பின்தள்ளபட்ட மக்களாக வாழ்வர்களில் பெருந்தோட்ட மக்களும் உள்ளடக்கப்படுகின்றனர்.

இவர்களின் அபிவிருத்தி தொடர்பில் நாங்கள் கவனமாக இருப்பதுடன் பல அபிவிருத்தி திட்டங்ளை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கொண்டு வருவதுடன் எங்களது பன்முகப்படுத்தபட்ட நிதிகள் மூலமும் அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம்.

இதனை பெருந்தோட்டங்களில் நடைமுறைப்படுத்துவதில் பாரிய சிக்கல்கள் தோன்றி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்ன என்று விரிவாக தேடி பார்க்கும்பொழுது தோட்ட நிர்வாகங்களின் அசமந்த போக்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

இதற்கு ஒரு சரியான தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரிகளிடம் இந்த விடயம் தொடர்பில் விபரமாக எடுத்துக் கூறப்பட்டது.

இதனை ஒத்துக்கொண்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாதவாறு தோட்ட அதிகாரிகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இனிவரும் காலங்களில் தோட்ட அதிகாரிகள் காரணமாக அபிவிருத்தி திட்டங்கள் மீண்டும் இரத்தாகி செல்லுமானால் அதற்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் தோட்ட அதிகாரிகளே. இவ்வாறான நிலையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட பெருந்தோட்ட முகாமைத்துவ மேற்பார்வை பிரிவு பணிப்பாளர், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர், 22 பெருந்தோட்ட கம்பனிகளின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.