மட்டு.சியோன் தேவாலய குண்டுவெடிப்பில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

Report Print Steephen Steephen in சமூகம்

ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவி, மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் காயமடைந்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அந்த மாணவி, மேலதிக சிகிச்சைக்காக வெலிசர வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து அவர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி பல்கலைக்கழக மாணவி இன்று உயிரிழந்துள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த யுவதி மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 22 வயதானவர் என தெரியவந்துள்ளது.

Latest Offers