புதுக்குடியிருப்பில் கம்பெரலிய திட்டத்தினூடாக 69 திட்டங்கள் நிறைவு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவு கம்பெரலிய திட்டத்தினூடாக 101 வேலைத்திட்டங்களில் 69 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்பெரலிய திட்ட விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் தலைமையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 19 கிராம அலுவலர் பிரிவுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஊடாக 37 திட்டங்களுக்காக 31 . 4 மில்லியன் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஊடாக 26 திட்டங்களுக்கு 19.5 மில்லியன் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒதுக்கீட்டின் ஊடாக 22 திட்டங்களுக்காக 16.7 மில்லியன் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடாக 16 திட்டங்களுக்காக 9. 8 மில்லியன் ரூபாவும் மொத்தமாக 101 திட்டங்களுக்காக 77. 4 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்ற நிலையில் தற்போது 69 வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர் ம.பிரதீபன், பிரதேச செயலக கணக்காளர், உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers