நீதியை பெற்று கொடுக்கும் வல்லமை அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றன - யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

Report Print Suthanthiran Suthanthiran in சமூகம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர்ச்சியாக போராட்டம் நடாத்தி வரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

படுகொலைகளுக்கும், காணாமல்போதல்களுக்கும் அமெரிக்கா தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் - நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் முன்பாக பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினா்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எதனையும் செய்யப்போவதில்லை. தற்போதும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த சந்தர்ப்பத்தையும் அவா்கள் சரியாக பயன்படுத்தவில்லை.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்திலும், இங்கு நடைபெற்ற படுகொலைகளுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்கும் வல்லமை அமெரிக்காவிடம் மட்டுமே இருக்கின்றது. அதனாலேயே மிக நீண்ட நாட்களாக அமெரிக்கா கொடியுடன் நீதிக்காக போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

எனவே அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு எமக்கு சாதகமான நீதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் உள்ளிட்ட எந்தவொரு விடயத்திற்கும் தீர்வினை காண முடியாது. ஆகவே தான் தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு முன் கூடிய நாங்கள் அதனை எதிர்ப்பு போராட்டங்களை நடாத்தியிருந்தோம்.

ஆகவே அமெரிக்கா இந்த விடயத்தில் தலையிட்டு எமக்கான நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டும். அதனை கோரும் வகையிலுமே இன்று சென் பீற்றர்ஸ் படுகொலை நினை விடயத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers