மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்: சுரேன் ராகவன்

Report Print Yathu in சமூகம்

நாளை பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணி விடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல் வட்டக்கச்சி விவசாய பண்ணையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராய்ந்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

உண்மையில் பல ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நாளை 20 ஏக்கருக்கு அதிகமான காணி விடுவிக்கப்படவுள்ளது.

அதேவேளை 100 ஏக்கர் காணிவரை விடுவிக்கப்படவுள்ளது. இவை அனைத்தையும் தனித்தனியாகவே செய்ய முடிகின்றது. இதற்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைத்திருக்கவில்லை.

அவர்கள் வெறுமனே காணிகள் விடுவிக்கப்படவில்லை என்ற கருத்துக்களை மாத்திரமே முன்வைத்து வருகின்றனர். மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்.

அதேபோன்று அரச திணைக்களங்களின் காணிகளும் உரிய முறைப்படி பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நான் உள்ளேன்.

பூநகரியில் உள்ள கயூ தோட்ட காணி பயன்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது, அதனை கூட்டுறவு முறையிலான பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த காணியும் விடுவிக்கப்பட்டு அவ்வாறான பயன்பாட்டிற்காக கையளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers