கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னேற்றம் ! இளைஞர்கள் ஆராவாரம்

Report Print Kumar in சமூகம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினையும், சகல அதிகாரம் கொண்ட கணக்காளரை நியமிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை வரவேற்று இன்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று மேற்கொள்ளப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட நகர்வு காரணமாக இந்த கணக்காளர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


you may like this video

Latest Offers