அருட்தந்தை பத்திநாதரின் இழப்பினால் துயரத்தில் மூழ்கியிருக்கும் மக்கள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இறைவனடி சேர்ந்துள்ளார் என்னும் செய்தி கிறிஸ்தவ மக்களுக்கும் முல்லை மக்களுக்கும் பெரும் துயரச் செய்தியாக மாறியிருக்கிறது.

கடந்த 1970ம் வருடம் ஏப்ரல் 06ல் அருட்தந்தையாகத் திருநிலைப் படுத்தப்பட்டு 2019 ஜூலை 07 வரை அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார், யாழ் மறைமாவட்டத்தில் பல்வேறு பங்குகளில் மாபெரும் பணிகளை மேற்கொண்டவர்.

குறிப்பாக வன்னி மண்ணின் புதுக்குடியிருப்பு, மாங்குளம், முல்லைத்தீவு பங்குகளில் அடிகளார் ஆற்றிய பணிகள் அளப்பரியது.

1 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் மல்லிகைத்தீவில் புனித வனத்து (கடற்கரை) அந்தோனியார் கோவிலை உருவாக்கியவர்.

2 - இளம்குருவாக 1970ன் நடுப்பகுதியில் புதுக்குடியிருப்பு பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் இரணைப்பாலையில் புனித பாத்திமா அன்னை ஆலயத்தை நிர்மாணித்தவர்.

3 - கடந்த 1980ன் நடுப்பகுதியில் மாங்குளம் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் பல தமிழ் இளைஞர்களுக்கு உதவி புரிந்ததனால் பாதுகாப்புப் படையினரின் சொல்லொனா நெருக்கடிளுக்கு ஆளாகி உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்.

4 - முல்லைத்தீவுப் பங்குத் தந்தையாகப் பணியாற்றிய காலத்தில் சுனாமிப் பேரழிவின் போது கடலிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் டிசம்பர் 26ல் திருக்குடும்பத் திருநாட் திருப்பலியை ஒப்புக் கொடுத்து எல்லாம் வல்ல மூவொரு இறைவனின் கருவியாகச் செயற்பட்டதால், முல்லைத்தீவில் தற்போது வசிக்கின்ற பலருடைய உயிரைக் காப்பாற்ற உதவி புரிந்தவர்.

5 - 2014ல் சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவில் இறந்துபோன 3000க்கும் மேற்பட்டவர்களது உடலங்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தன்னுடன் பணியாற்றிய உதவிக் குருக்களது ஒத்துழைப்போடு பெரும் பங்காற்றியவர்.

6 - சுனாமி நினைவு மண்டபம் முல்லைத்தீவில் நிறுவுவதில் பெரும் தொண்டாற்றியவர்.

7 - இறுதி யுத்த காலத்தின் பின்னரும் மாங்குளம் பங்குத் ததையாக மீண்டும் பணியாற்றி அழிந்துபோன வன்னி மன்ணை மீளக் கட்டி எழுப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்தவர்.

இவ்வாறு பங்கு மக்களோடு மட்டுமல்ல அனைத்து மத இன மக்களின் ஆதரவோடு அவர்களின் தேவைகளை இறைவழியில் செய்து மக்களின் துன்பத்தை துடைத்து பங்காற்றியிருக்கிறார்.

Latest Offers