மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வறட்சியும், வெப்பமும் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை சில இடங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபட்டது. அத்தோடு மக்களுடைய வாழ்விடங்களில் பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன.

மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும், தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும், புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும், பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அகிலன், மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ், அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.

Latest Offers