வெளிநாடுகளிலிருந்து வெளியேற்றட்ட 858 இலங்கையர்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

மத்திய கிழக்க நாடுகளில் பணி புரிந்த நிலையில், அங்கிருந்து 858 பெண்கள் நேற்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

குவைத், சவுதி அரேபியா, ஜோடான் ஆகிய நாடுகளில் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இருந்த பெண்களில் ஒரு தொகுதியினர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியா ரியாத் தூதரக அலுவலகத்தின் பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 18 பேர் இலங்கை வந்துள்ளனர். இதுவரையில் இன்னும் 33 பேர் அங்கு தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோடான் தூதரக அலுவலக பாதுகாப்பு நிலையத்தில் தங்கியிருந்த 12 பெண்கள் இலங்கை வந்துள்ளனர். அங்கு தற்போது எவரும் அங்கு தங்கியிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உலக நாடுகளில் உள்ள தூதரக அலுவலக தொழிலாளர் பிரிவு 12 இன் கீழ் நடத்தப்படும் பாதுகாப்பு நிலையங்களில் இது வரையில் தங்கியிருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 263 ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.