3 இலட்சத்துக்கும் மேற்பட்ட சட்டவிரோதமான மாத்திரைகள் இலங்கைக்கு இறக்குமதி

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் இருந்து 350,000இற்கும் மேற்பட்ட சட்டவிரோதமான மாத்திரைகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத மாத்திரைகள் இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன எனவும், இதன் பெறுமதி இலங்கை பெறுமதியில் 7 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல பிரித்தானியா பவுன்சில் பார்க்கும் போது இதன் பெறுமதி 32,000 பவுன்ஸ்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் பிரத்தானியா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்திருக்கின்ற தகவலின் படி, இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சவுத் வேல்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர்.