ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

Report Print Kalaiyarasi Kalaiyarasi in சமூகம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தாருக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தினால் விரைவில் வழங்கி வைக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வடிவேல் குபேரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு நேற்று மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநகரசபை உறுப்பினராக வடிவேல் குபேரன் பதவிப்பிரமாணம் பெற்றதன் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

இன்று நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் கடந்த 10 வருடங்களாக இளைஞர் அணி தலைவராக கடமை செய்து வருகின்றேன்.

அதனடிப்படையில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியின் வேண்டுகோளுக்கும் கட்சியின் உயர்மட்ட பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினராக மாநகர முதல்வர் தி.சரவணபவன் முன்னிலையில் பதவியேற்றுள்ளேன்.

அந்தவகையில், எனது செயற்பாடுகளாக மக்கள் மத்தியில் உள்ள பொதுவான பிரச்சினைகள் தொடர்பாகவும் சக காலத்தில் நிலவும் விடயங்கள் சம்மந்தமாகவும் நான் எனது சேவைகளை தொடரவுள்ளேன்.

அத்துடன் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த நபர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடுகள் அரசாங்கத்தினால் விரைவில் வழங்கி வைக்கப்பட வேண்டும்.

அத்துடன் அவர்களது மனநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. ஆகையினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மனநிலைகளை மாற்றுவதற்கான சிறப்பு பயிற்சிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யவுள்ளதுடன் தீர்மானங்களையும் எடுத்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers