திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து போராட்டம்

Report Print Theesan in சமூகம்

மன்னார், திருக்கேதீஸ்வர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக் கண்டித்து வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தில் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், ஏனைய பொது அமைப்புக்களின் ஏற்பாட்டிலும் இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே!, ஆட்களை விரட்டாதே, எம்மவரைப் பங்கு போடாதே, வீடு வீடாகத் திரியாதே, அன்பு செய்வது போல் ஆணவம் காட்டாதே, மன்னார் ஆயரே புராதனமான பாரம்பரியத்தை சிதைக்காதே திருக்கேதீஸ்வர வளைவை மறைக்காதே, ஈழம் எங்கள் பூமி போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.தனபாலனிடம் இந்து கலாச்சார அமைச்சிற்கு மகஜர் ஒன்றினை வழங்கியதையடுத்து போராட்டம் நிறைவு வந்துள்ளது.