பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டோர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று காலை பொகவந்தலாவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்தப்படும் பல உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers