உலகின் சிறந்த தீவாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபல சஞ்சிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாத்துறை சஞ்சிகையான ட்ரெவல் லெஷர் என்ற சஞ்சிகை இந்தத் தெரிவை மேற்கொண்டிருக்கிறது.
90 துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போட்டித் தன்மை, சிறந்த விமானப் போக்குவரத்து, கலாச்சார பண்பாடுகள் போன்ற விடயங்கள் இதில் முக்கியத்துவம் பெறுவதாக சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் வெளியான மற்றுமொரு ஆய்வில் சிறந்த சுற்றுலாத் தளமாக இலங்கை முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.