சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் படகுடன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள், அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச கடல் எல்லையில் இருந்து 3 கடல் மைல் தொலைவில் இலங்கையின் வடக்கு கடல் எல்லையில், இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர், அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்.மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.