வாக்குகளுக்காக இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம்: அப்துல்லா மஹ்ரூப்

Report Print Gokulan Gokulan in சமூகம்
73Shares

வாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி, இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என நாடளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

சிலர் உயர்ந்த சபையில் இனவாத பேச்சுக்களை பேசி, இனவாதத்தை கக்கும் சக தமிழ் பேசும் உறுப்பினர்கள் காணப்படுகிறார்கள்.

சஹ்ரானின் பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இருப்பதாகவும் அவருக்கு தலைவர் இருப்பதாகவும் கூறும் இவ்வாறான உறுப்பினர் இதை அரசின் பாதுகாப்பு பிரிவுக்கு சொல்ல வேண்டும்.

நாடாளுமன்றில் அமைக்கப்பட்ட தெரிவுக்குழுவின் முன் சொல்ல வேண்டும். மாறாக இன வாத பேச்சுக்களை பேசி, இன நல்லுறவை சீர் குலைத்து வாக்குகளை பெற முயற்சிக்காதீர்கள். இதனால், நாட்டில் சட்ட திட்டங்கள் புலனாய்வு பிரிவு என்பன கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

சஹ்ரான் இஸ்லாமிய அடிப்படைவாதியல்ல. முஸ்லிம்கள் இந்நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நாட்டின் அரசியல் சட்ட, திட்டங்களுக்கும் ஆட்சிக்கும் இணைந்து செயற்பட்டவர்கள். முஸ்லிம்களிடத்தில் பயங்கரவாதம் இல்லை அப்படி இருந்தால் காட்டிக் கொடுங்கள்.

நாடாளுமன்றத்தில் இப்படி இனவாத பேச்சுக்களை பேசும் க.கோடீஸ்வரன் போன்றோர் இதனால் மக்களின் வாக்குகளை பெற முடியாது.

22 இலட்சம் முஸ்லிம்களும் சஹ்ரான் பயங்கரவாதி எனக் கூறியபோதும் அவனுக்கு தலைவர் இருப்பதாக கூறுவது வெறும் இன, மதவாதத்தை தூண்டும் செயலாகும். இவ்வாறான பேச்சுகளை பேசி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தாதீர்கள் என அவ்அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.