அமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் - பெயர் விபரங்கள் வெளியானது

Report Print Vethu Vethu in சமூகம்
7410Shares

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என்ற இந்த இளைஞன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா நோக்கி சென்றுள்ளார்.

பயண முகவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்ட போது சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனைய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உறவினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.