மீனுக்காக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கையின் வடக்கு கரையோர கிராமங்களின் பொருளாதார உயிர்நாடியாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது.

மூன்று தசாப்த கால உள்நாட்டு போர் காரணமாக இலங்கையின் வட பகுதி மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை குறைவாக காணப்பட்டதுடன், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களுக்கு நெடுந்தூரம் சென்று மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர். இரண்டு எல்லைகளிலும் அவர்கள் மீன் வளத்தை அள்ளி சென்றனர்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கையின் வடபகுதி மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபட வாய்ப்பு கிடைத்துள்ளது. எனினும் இந்திய மீனவர்கள், டோலார் படகுகள் மற்றும் மடி வலைகளை கொண்டு, இலங்கை கடல் எல்லைக்குள் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், தமக்கு போதிய மீன் அறுவடை கிடைப்பதில்லை என இலங்கையின் வடபகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு இந்திய மீனவர்களே காரணம் என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்திய மீனவர்கள் பெரிய படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை தாக்கியும் கைது செய்தும் வருகின்றனர். அத்துடன் அவர்களின் படகுகளையும் கைப்பற்றுகின்றனர்.

இந்த பிரச்சினையானது கடலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் இரண்டு தமிழ் சமூகங்களுக்கு இடையிலான உறவுகள் மோசமடையாக காரணமாக உள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா இடையிலான இந்த கடல் எல்லை பிரச்சினையாது இரு நாட்டு தமிழ் மீனவ சமூகங்களில் இடையில் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார ரீதியான தாக்கங்கள் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி விவரணப்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணப்படத்தை காண இங்கே அழுத்தவும்