தீக்காயங்களுடன் கணவன் மனைவி வவுனியா வைத்தியசாலையில்: பொலிஸார் தீவிர விசாரணை

Report Print Thileepan Thileepan in சமூகம்
86Shares

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடோன்றிலிருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டில் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அதனையடுத்து அயலவர்கள் வீட்டின் கதவினையுடைத்துக்கொண்டு உள்ளே சென்ற சமயத்தில் வீடு முழுவதும் மண்ணேண்ணேய் ஊற்றிக்காணப்பட்டதுடன் அவர்கள் தீப்பற்றிய நிலையில் காணப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அயலவர்கள் கணவன் மனைவியான இருவரையும் மீட்டேடுத்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

ஜனகன் (வயது-29) மற்றும் சுமங்கலி (வயது-27) ஆகிய இருவருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கை , கால் , நெஞ்சு ஆகிய இடங்களில் தீக்காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பொலிஸ் காவல் அரண் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.