வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் நாளை காலை 7 மணி தொடக்கம் 5 மணிவரை மின்தடை ஏற்படும் என பிரதம பொறியியலாளர் மைதிலி தயாபரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா உப மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர திருத்த வேலை காரணமாக 13.07 சனிக்கிழமை காலை 07.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை வவுனியா பிரதேசத்தின் பல இடங்களில் மின் தடைப்படும்.

அந்தவகையில், வவுனியா நகரம், இறம்பைக்குளம், மூன்றுமுறிப்பு, மதவுவைத்தகுளம், ஈரப்பெரியகுளம், கற்குண்டமடு, அளுத்கம, பூஓயா, பஹல அளுத்வத்த, கண்டி வீதி, தவசிக்குளம், குட்செட்வீதி, பண்டாரிக்குளம், நெடுங்குளம்,

தெற்கிலுப்பைக்குளம், கோவில்குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வெளிக்குளத்திலிருந்து துட்டுவாகை வரை, கருவேலப்புளியங்குளம், மலையாபருத்திக்குளம், மடுகந்த, அட்டம்பஸ்கட உட்பட்ட இடங்களிலும் மின் தடைப்படும்.

மேலும் மாமடுவிலிருந்து பொகஸ்வேவா வரை, பறயனாலங்குளத்திலிருந்து முகத்தான்குளம் வரை, நெளுக்குளத்திலிருந்து பறயனாலங்குளம் வரை, பூவரசங்குளத்திலிருந்து செட்டிக்குளம் வரை, புளிதறித்தபுளியங்குளத்திலிருந்து

செக்கட்டிப்புலவு வரை, பிரமனாளங்குளத்திலிருந்து பெரியதம்பனை வரை, பூந்தோட்டம், வைரவபுளியங்குளம், பட்டானிச்சூர், குருமன்காடு, வேப்பங்குளம், குளுமாட்டு சந்தி, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், சாம்பல்தோட்டம்,

பாரதிபுரம், விநாயகபுரம், இராயேந்திரகுளம், நாகர்இலுப்பைகுளம், அறுகம்புல்வெளி, அவுசதப்பிட்டிய, நவகம, பழையனூர், உளுக்குளம், சின்னத்தம்பனை, நேரியகுளம், இலுப்பைக்குளம், அழகாபுரி, முதலியார்குளம், சின்னசிப்பிக்குளம், முகத்தான்குளம், செட்டிக்குளம் உள்ளிட்ட கிராமம் வரையும் மின்சார விநியோகம் தடைப்படும்.

இதேவேளை, பின்வரும் தொகை வளங்கள் மின் பாவனையாளர்களுக்கும் மின் தடை ஏற்படவுள்ளது.

வவுனியா வைத்தியசாலை, பூங்கா வீதி, சூசைப்பிள்ளையார்குளம், கொக்கெலிய, அக்கோபுர, கச்சேரியடி நீர்பாசன சபை, சுகாதார திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்பு நிலையம், மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, இலங்கை வங்கி, ஓவியா விடுதி, எஸ்.வீ.ஆர் அரிசி ஆலை, ராணி அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, கார்கில்ஸ் பூட் சிற்றி, விமானப்படை முகாம் உப இல 01, மன்டெரின் ஆடைத்தொழிற்சாலை, வவுனியா இராணுவ முகாம், வவுனியா விமானப்படை இணைந்த பராமரிப்பு நிலையம், மூன்றுமுறிப்பு இராணுவ முகாம், ஆகிய தொகைவளங்கல்களுக்கும் மின்சாரம் தடைப்படவுள்ளது.

மேலும் கௌவ்லூம் ஆடைத்தொழிற்சாலை, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், எஸ் எல் பி சி ஈரப்பெரியகுளம், கீர்த்தி அரிசி ஆலை, ஹொரவப்பொத்தானை வீதி, குடாகச்சக்கொடிய கல்லுடைக்கும் ஆலை, பிரசன்னா கல்லுடைக்கும் ஆலை, சிஈசீ கல்லுடைக்கும் ஆலை, யுஎன்எச்சீஆர் குருமன்காடு, ஸ்ரீரங்கன் அரிசி ஆலை, தெய்வேந்திரம் அரிசி ஆலை, ஜீவன் அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை, அஸ்வி அரிசி ஆலை, சுயன் அரிசி ஆலை காதன்கோட்டம், நெளுக்குளம் நீர்ப்பாசன சபை, தந்திரமலை சந்தி (கஜசிங்கபுர இராணுவ முகாம்),

வவுனியா பல்கலைக்கழகம், பம்பைமடு பல்கலைக்கழகம், நெளுக்குளம் தொழிநுட்பக்கல்லூரி, விமானப்படை வேளாங்குளம், செட்டிகுளம் வைத்தியசாலை, செட்டிகுளம் தொலைத்தொடர்பு நிலையம், செட்டிகுளம் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம், சக்திகம மல்வத்துஓயா இல 02, மெனிக்பாம் வலயம் 02 ஆகிய தொகை வளங்கள் பாவனையாளர்களுக்கும் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.