மக்களின் நலனுக்காக இதயங்களினால் ஒன்றிணைவோம்

Report Print Theesan in சமூகம்
57Shares

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபையில் இடம்பெற்ற சுத்தமான நகரம், பசுமையான நகரம் செயற்றிட்ட நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்காவினால் அழைத்துச் செல்லப்பட்ட வவுனியா மாவட்ட உள்ளுராட்சி சபை மன்றங்களில் 11 உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபைத்தவிசாளர் சென்பகவள்ளி தலைமையில் இன்று இடம்பெற்ற சபை நடவடிக்கைகளில் கலந்துகொண்டதுடன் அங்குள்ள நடைமுறைகளையும் பார்வையிட்டுள்ளதுடன் பிரதேச சபை வளாகத்தில் மரநடுகையினையும் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு நாள் பயணமாக இன்று அங்கு சென்ற உறுப்பினர்கள் மஸ்கெலியா நகரின் கழிவகற்றல் செயற்றிட்டத்தினையும் பார்வையிட்டு அனுபவங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.