தென்மராட்சியில் மணற்கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸ்

Report Print Sumi in சமூகம்

தென்மராட்சி பகுதியில் இடம்பெற்று வந்த மணற்கொள்ளை விசேட பொலிஸ் அணியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தென்மராட்சி குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளால் தென்மராட்சிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு தொடர்பில் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து குறித்த மணல் அகழ்வினை தடுப்பதற்காக விசேட பொலிஸ் அணி ஒன்று உருவாக்கப்பட்டு கடந்த ஓரிரு நாட்களில் பல உழவு இயந்திரங்கள் மற்றும் சட்டவிரோத மணல்அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக கடந்த தென்மராட்சி அபிவிருத்தி குழு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளால் பொலிசாரை நம்ப முடியாது, இந்த மணல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கும் பொலிசாருக்கும் தொடர்புள்ளது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த விசேட பொலிஸ் அணியானது உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அணியானது மிகவும் நுட்பமான முறையில் மணல் கொள்ளையில் ஈடுபடுவோரை கைது செய்வதோடு கொள்ளையில் ஈடுபடுவோருக்கு துணை புரிவோரையும் கைது செய்து வருகிறார்கள்.

குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களில் மட்டும் 13 பேருக்கு மேற்பட்டோர் மற்றும் ஆறு உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை தான் விடுதலை செய்து விடுவதாகவும் அவர்கள் அதற்கு மூன்று லட்சம் ரூபா நிதியினை தனக்கு உதவுமாறும் சாவகச்சேரி நகர சபையின் தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நபரின் உறவினரிடம் கோரிக்கையும் விடுத்துள்ளார். எனவே குறிப்பாக தென்மராட்சிப் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்விற்கு அரசியல்வாதிகள் மற்றும் பொலிசாருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.