அவுஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து 7 அகதிகள் அமெரிக்காவுக்கு பயணம்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 7 பேர் அமெரிக்காவில் மீள்குடியேற்றப்படுவதற்காக அந்நாட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற இலங்கை, ஆப்கானிஸ்தான், சூடான், ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகள் 6 ஆண்டுகளுக்கு மேலாக நவுருத்தீவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை ஒருபோதும் அவுஸ்திரேலியாவில் குடியேற்ற மாட்டோம் என சொல்லி வரும் அவுஸ்திரேலிய அரசு, இந்த அகதிகளை மீள்குடியேற்றவதற்கான ஒப்பந்தம் ஒன்றை 2016ல அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.

1250 அகதிகளை மீள்குடியமர்த்துவது என்று அவுஸ்திரேலியா- அமெரிக்காவுக்கு இடையேயான ஒருமுறை ஒப்பந்தமாக கையெழுத்தானது.

அதன்படி, இதுவரை அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த 580 அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 1000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருத்தீவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில்,

1250 என்ற எண்ணிக்கையை அடைவது சாத்தியமற்றது என அண்மையில் அவுஸ்திரேலிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த மே மாதம் நடைபெற்ற பெடரல் தேர்தலில், ஆளும் லிபரல் கூட்டணி அரசு அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதனால் படகு வழியாக வரும் அகதிகளை கையாளும் கொள்கையில் தொடர்ந்து இறுக்கமான போக்கே நடைமுறையில் இருக்கின்றது. அதே சமயம், லிபரல் கூட்டணி அரசின் வெற்றியினால் பல அகதிகள் தற்கொலை முயன்ற சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.