ஒட்டுசுட்டான் - கற்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ,கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை காலங்களாக அதிகரித்து வந்த வெப்பநிலை காரணமாக கடும் வறட்சி நிலை ஏற்பட்டிருந்தது.

இதனால் பொதுமக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று பிற்பகல் ஒட்டுசுட்டான் கட்சிலைமடு பகுதியில் ஓரளவு மழை பெய்துள்ளது.

எனினும் முள்ளியவளை, குமுழமுனை, செம்மலை, அளம்பில், புதுக்குடியிருப்பு, விசுவமடு உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்தும் வெப்பநிலை அதிகரித்தே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.