வெளிநாட்டவர்களின் சடலங்களுடன் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல்! மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
356Shares

உக்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களின் சடலங்களின் உடல் பாகங்களை இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

இலங்கை ஊடாக இந்தியா செல்லும் வழியில் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது.

இருவரின் சடலங்களும் இன்று வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின் போது அறிகுறிகள் காணப்படவில்லை.

இந்நிலையில், மேலதிக பகுப்பாய்வுக்காக உடல் பாகங்களை கொழும்பிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

உயிரிழந்த வெளிநாட்டவர்கள் இருவரின் சடலங்களையும் திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். அப்துல் முஹீத் நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

அத்துடன், குறித்த கப்பலில் பொறியியலாளராக கடமையாற்றி வந்தவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாக்குமூலத்தின் பிரகாரம் கடந்த எட்டாம் திகதி காலை 10 மணியளவில் இரண்டாம் தர பொறியியலாளராக கடமையாற்றி வந்த பொறியியலாளர் மூச்சுத் திணறல் காரணமாக முதல் உதவிகள் வழங்கப்படும் அவர் உயிரிழந்ததாகவும் இதனையடுத்து நான்கு மணித்தியாலத்துக்கு பிறகு மற்றைய வெளிநாட்டவருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் உக்ரைன் நாட்டை சேர்ந்த 34 வயதுடைய சரீரி பெரிட்டு மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய அலெக்சாண்டர் பிரணவ் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருவரின் சடலங்களையும் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தூதரகங்கள் மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.