கிழக்கு மாகாண சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிழக்கு மாகாணத்தில் சுகாதார சேவைகள் திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். அருள்குமரன் இன்று தெரிவித்துள்ளார்.

சுகாதாரத் திணைக்களத்தில் பரிசோதகர்களாக கடமையாற்றும் 120 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதுடன், சாதாரண தொழிலாளர்கள் 270 பேருக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்திக்கும் முகமாக 800 பேர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய நியமனங்கள் வழங்கப்படுகின்ற பட்சத்தில் அனைத்து வைத்தியசாலைகளில் காணப்படும் அனைத்து ஊழியர்கள் பற்றாக்குறை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க முடியும் எனவும், எதிர்காலத்தில் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.