சேருவில பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை - சேருவில பகுதியில் புதையல் தோன்றிய குற்றச்சாட்டில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சேருவில,தோப்பூர் மற்றும் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சேருவில பௌத்த விகாரையை அண்மித்த பகுதியில் புதையல் தோன்றிய நிலையில், பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, இரும்புக்கம்பிகள், கூடைகள், அலவாங்கு, பிக்காஸ் போன்றனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களை தடுத்து வைத்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.