மன்னார் மாவட்ட மின்பாவனையாளருக்கு ஓர் முக்கிய தகவல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் 5 மணிவரை மின்தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

வவுனியா உப மின் நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர திருத்த வேலை காரணமாக நாளை காலை 07.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை மன்னார் பிரதேசத்தில் பின்வரும் இடங்களில் மின் தடைப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

பறயனாலங்குளத்திலிருந்து முருங்கன் வரை, முருங்கன் ஊடாக சிலாவத்துறையிலிருந்து முள்ளிக்குளம் வரை, சிலாவத்துறை, சிலாவத்துறை கடற்படை முகாம், தேக்கம், நானாட்டான் பிரதேச சபை ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.