அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் நடவடிக்கை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Gokulan Gokulan in சமூகம்

எந்தவொரு அரச உத்தியோகத்தர்களுக்கும் இலஞ்சம் கொடுத்து உங்களது காரியங்களை நிறைவேற்ற முற்பட வேண்டாம் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களாகிய உங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற வீடமைப்பு, மலசலகூடம், வாழ்வாதார உதவிகள், சமுர்த்தி முத்திரை, காணி அனுமதிப்பத்திரங்கள், மண் அனுமதிப்பத்திரங்கள் போன்ற பணிகளின் போது அவற்றை நிறைவேற்றி கொள்வதற்கு இலஞ்சம் கொடுக்க வேண்டாம்.

அதுபோல் முறையாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய இவ்வாறான விடயங்களுக்கு உத்தியோகத்தர்களில் எவராவது உங்களது காரியங்களை நிறைவேற்றுவதற்காக பணமாகவோ மற்றும் பொருளாகவோ இலஞ்சம் கோரினால் உடனடியாக அறியத்தருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இதுதொடர்பாக பொதுமக்களாகிய நீங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு:

  • பிரதேச செயலாளர் : 026 - 2238235
  • உதவி பிரதேச செயலாளர் : 026 - 2238237
  • உதவித் திட்டமிடல் பணிப்பாளர் : 026 - 2238688
  • உப பிரதேச செயலகம், தோப்பூர் : 026 - 2240325

Latest Offers