ரிசாட் அமைச்சராவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை!

Report Print Kamel Kamel in சமூகம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதீன் அமைச்சராக பதவி வகிப்பதனை ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.

ஹேசா விதானகே ஐக்கிய தேசியக் கட்சியின் ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரிசாட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு அமைச்சு பதவி வழங்குவது பிழையானது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையாக விசாரணைகள் நடத்தப்படும் வரையில் அமைச்சுப் பதவி வழங்கப்படகூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் பூர்த்தியானால் தாமே அவருக்கு அமைச்சு பதவி வழங்குமாறு கோருவதாக ஹேசா விதானகே தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.