பேருந்து சாரதியின் அலட்சிய போக்கு! பாடசாலை மாணவி படுகாயம்

Report Print Kanmani in சமூகம்

எம்பிலிப்பிட்டியவிலிருந்து - கொழும்பு நோக்கி பயணித்த பேருந்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில் மாணவியொருவர் காவத்தை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெல்மதுளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரங்கொடை பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

குறித்த மாணவி பேருந்திலிருந்து இறங்க முற்பட்ட வேளை, இறங்குவதற்கு முன்னர் சாரதி பேருந்தினை செலுத்தியமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயமடைந்த மாணவி பெல்மதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக காவத்தை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.