வன்னி மண்ணை பெருந்துயரில் ஆழ்த்திய அருட்தந்தையின் பேரிழப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

தன் வாழ்நாளில் பல இழப்புக்களை தமது கண்முன்னே கண்டவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மக்கள் என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் அந்த இழப்புக்களையெல்லாம் தாங்கிக்கொள்ள பழக்கப்பட்ட எமது தமிழர் சமூகம் இன்று பாரிய இழப்பொன்றை சந்தித்து மீளா துயரில் ஆழ்ந்துள்ளது.

தமது உரிமை கோரிய 30 வருட கால போராட்டத்தில் தமது தோளோடு தோள்கொடுத்து தங்களுக்காக போராடிய, முள்ளிவாய்க்கால் மண்ணில் கோரத்தாண்டவம் ஆடிய இறுதி யுத்தத்தின் சாட்சியமாக இருந்த அருட்தந்தை பத்திநாதன் மண்னுலகை விட்டு தனது விண்னுலகுக்கான பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

இவரது இந்த இழப்பு தமிழர் தாயக மக்கள் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு. ஈடு செய்ய முடியாத இவரின் மனிதத்துவம் காலம் கடந்தும் எம்மத்தியில் இவரை வாழ வைத்துக் கொண்டிருக்கும்.

அறிவித்தலைப் பார்வையிட்டு கண்ணீர் அஞ்சலிகளை Post Tribute இல் பகிர்ந்துகொள்ள இங்கே அழுத்தவும்

Latest Offers