மன்னாரில் உதயமானது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம்

Report Print Ashik in சமூகம்

ஜனநாய ரீதியில் தமிழர் வாழ்வுரிமை சார்பான விடயங்களை முன் நிறுத்தி, அரசியலுக்கு அப்பால் தமிழ் மக்களின் வாழ்வியல் நகர்வுகளை முன்னெடுக்கும் நோக்கில் மன்னார் மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மன்னார் மாவட்ட தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் வைபவ ரீதியாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது சிவில் சமூக ஆர்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் , மத குருக்கள் மற்றும் தமிழர் வாழ்வுரிமை இயக்கத்தின் அங்கத்தவர்கள் முன்னிலையில் வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இயக்கத்தின் செயற்பாடுகள் மற்றும் கொள்கைகள் தொடர்பாக விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் மாவட்ட , பிரதேச , கிராம ரீதியில் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ள இருக்கும் அரசியல், சமூக, கலாசார விழிப்புணர்வு கருத்தமர்வுகள், துண்டுப்பிரசுர விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ச்சியாக அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களின் நிலம், உரிமை , காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் , அரசியல் கைதிகள் தொடர்பான விடயங்களில் முன் நின்று செயற்படுவதுடன், மாவட்ட மற்றும் கிராம ரீதியில் நிர்வாகம் மற்றும் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு இயக்கத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக தெரிவுகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers