யாழிலிருந்து சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் முழுமையான விபரங்கள்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தந்தை மற்றும் மகள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளது.

வெயங்கொட - வந்துரவ ரயில் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் தந்தை மற்றும் மகளே உயிரிழந்தனர். நேற்று காலை 6.30 மணியவில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் ஜா-எல கொட்டுகொட பகுதியை சேர்ந்த ருவன் சஞ்ஜீவ சிந்தக்க சில்வா என்ற 44 வயதான நபர் மற்றும் அவரது மகளான 11 வயதுடை ருசதி டிலன்சா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

ருவன் சஞ்ஜீவ தனது மனைவியின் தந்தையின் தானத்தில் கலந்து கொண்டு, மகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்தில், கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் இருவரும் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மகள் 6ஆம் வகுப்பில் கல்வி கற்கின்ற நிலையில் பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சைக்கு முகம் கொடுப்பதற்காக தனது தந்தையுடன் செல்லும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளார்.

உயிரிழந்த தந்தை மகளின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வத்துப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


you may like this video