யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற நபருக்கு நேர்ந்த கதி

Report Print Sumi in சமூகம்

ஐந்தாயிரம் ரூபா கள்ள நாணயத்தாளொன்றை வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பெருமாள் கோவில் பகுதியில் கடை வைத்திருக்கும் சந்தேகநபரிடம் அடையாளம் தெரியாத நபரொருவர் குறித்த நாணயத்தாளை கொடுத்து பொருட்கள் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு கஸ்தூரியார் வீதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் கடை உரிமையாளர் எரிபொருள் நிரப்பி விட்டு அந்த பணத்தை கொடுத்துள்ளார்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் அதனை கள்ள நாணயத்தாள் என அடையாளம் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அந்த தகவலின் பிரகாரம், கடை உரிமையாளரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்த நபரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers