போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது யாழில் வசமாக சிக்கிய இளைஞர்கள்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இளைஞர்கள் நால்வர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் வசமாக சிக்கியுள்ளனர்.

சுமார் 20 முதல் 22 வயதுடைய இளைஞர்களே ஹெரோயின் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் யாழ். நகரப் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Offers