கவனமாக இருங்கள்..? ஞானசாரரின் அறிவிப்பு

Report Print Jeslin Jeslin in சமூகம்

நாட்டின் பொது எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளாமல் ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களின் பின்னால் சென்று குழப்பிக் கொள்ள வேண்டாம், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ரஞ்ஜன் ராமநாயக்க பௌத்த தேரர்கள் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் நேற்றையதினம் தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக் காலத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர என்பவர் இது பௌத்த நாடு அல்லவென ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார். அரசியல் களத்தின் போக்குகளைச் சிதைக்கச் செய்யும் நடவடிக்கைகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அரசியல் போக்கின் யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டே செயற்பட வேண்டும் எனவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


you may like this video

Latest Offers