யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற வாகனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் : சந்தேக நபர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்ற வாகனத்திலிருந்து கஞ்சாவுடன் நபரொருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - கல்கமுவ பகுதியிலிருந்து நேற்று வாகனம் ஒன்றில் சிலர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவிற்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சாவகச்சேரிப் பகுதியில் வைத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வாகனத்திலிருந்த சந்தேகத்திற்கிடமான பொருள் 4 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணகைளை மேற்கொண்டுள்ளனர்.

இதனடிப்படையில் குறித்த சந்தேகநபர் வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் வன்னிநாயக்க என்பது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கஞ்சாவைவை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Latest Offers