ஓமந்தையில் 7 மிதிவெடிகள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும், விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல் அரணுக்கும் இடைப்பட்ட விளக்குவைத்தகுளம் பகுதியிலிருந்து மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த மிதி வெடிகளை இன்று காலை 7 மணியளவில் மீட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓமந்தை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணியொன்றிலில் நேற்று முதல் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவு புணிகள் இடம்பெற்று வந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பகுதியில் 7 மிதிவெடிகள் காணப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கு காணி உரிமையாளரினால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்த பொலிஸார் மிதி வெடிகள் காணப்படும் பகுதியை அடையாளப்படுத்தி நீதிமன்றத்தின் அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி உள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers