இந்து சமய நடவடிக்கைக்கு சவால் விடுக்கும் முகமாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபடுவதை பாதுகாப்பு தரப்பினர் தடுத்திருக்கின்றமையானது, இந்து சமய நடவடிக்கைக்கு விடுக்கும் சவால் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று பிள்ளையார் கோயிலுக்கு வழிபடுவதற்காக சென்ற பக்தர்களை உள் செல்ல விடாது தடுத்து வைத்துள்ளமை தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த நேரத்தில் ஆதீனத்துக்கு ஏற்பட்ட அவமானம் இந்து சமயத்தை இழிவுபடுத்திய செயலெனவும், இச்சம்பவத்தை பொறுத்துக் கொள்ள முடியாது. எனவும் ஆதீனம் சுவாமியுடன் பேசி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றம் வரைக்கும் கொண்டு செல்ல உள்ளோம்.

இந்த மக்களுக்கு உரித்தான இடத்தில் ஆதீனத்தை அவமானப்படுத்தியது இந்துக்களின் புனித பூமியில் அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்திலேயே தான் பிள்ளையார் ஆலயம் அமைக்க வேண்டும் எனவும் அது எங்கள் பூமியாக இருக்க வேண்டும் எனவும் ஊமையாக இருப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.