மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும்! எழுத்தாளர் சர்மிலாவின் புதுப் படைப்பு

Report Print Ashik in சமூகம்

ஈழத்தில் பிரபல எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மொட்டப்பனையும் முகமாலைக் காத்தும் என்கின்ற சிறுகதைத் தொகுப்பு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் இன்றைய தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த நூலை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதன்போது, வவுனியா தேசிய கல்வியற் கல்லாரியின் நிதி நிர்வாக உப பீடாதிபதி பொ.சத்தியநாதன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஒய்வு நிலை கல்வியலாளர் க.தர்மராசா மற்றும் ஓய்வு நிலை அதிபர் மணலாறு விஜயன் உற்பட மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers