நிர்க்கதியான நிலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள்!

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக புதுமாத்தளன் -சாலை கடல் நீர் ஏரி பாலைவனமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சாலை கடல் ஏரியில் சிறுகடல் தொழிலை ஜீவனோபாய மார்க்கமாய்க் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாலை - புதுமாத்தளன் உள்ளிட்ட பகுதியில் சிறுகடல் தொழிலே தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வந்த 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதில் அதிகளவிலான பெண்கள் அடங்குவதாக சாலை சிறுகடற்தொழில் சங்கத்தலைவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.