ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்தவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! இப்படியொரு மனிதரா??

Report Print Vethu Vethu in சமூகம்

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணியின் செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

எல்ல பிரதேசத்தில் சிறிய தேனீர் கடை ஒன்றுக்கு சென்ற குறித்த சுற்றலா பயணி, அதன் உரிமையாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிறிய கடையில் தேனீர் ஒன்றின் விலை 50 ரூபாவாகும். அதனை அருந்திய சுற்றுலா பயணி 1000 டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

குறித்த தேனீர் கடைக்கு செல்லும் எந்தவொரு வெளிநாட்டவருக்கும், உள்நாட்டவர்களுக்கு தேவையான தேனீர் வகைகளை அருந்த முடியும்.

மிகவும் அழகான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தேனீர் கடைக்கு பெருமளவு மக்கள் செல்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளின் தேனீர் வகைகள் அங்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மோட்டர் சைக்கிள் ஓட்டி வந்த நெதர்லாந்து நாட்டவர் ஒருவர் இலங்கை இளைஞனின் முயற்சியை பாராட்டியுள்ளார். கடை உரிமையாளரின் முயறச்சியை பாராட்டும் வகையில், 1000 டொலர் செலுத்தி தேனீர் பருகியுள்ளார். அத்துடன் அந்த பணத்தை வர்த்தக நடவடிக்கைக்காக பயன்படுத்துமாறு சுற்றுலா பயணி குறிப்பிட்டுள்ளார்.

50 ரூபா பெறுமதியான தேனீருக்கு இவ்வளவு பெரிய தொகை பணத்தை வழங்கிய நெதர்லாந்து நாட்டவர் குறித்த கடையையும் காணொளி எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

Latest Offers